இன்று பலப்பரீட்சை செய்யும் ராஜஸ்தான் - பஞ்சாப்: ஆடும் லெவன் எப்படி இருக்கும்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆர்சிபியை படுதோல்வியை அடைய வைத்து வெற்றி வாகை சூடிய மகிழ்ச்சியில் களமிறங்குகிறது கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப். அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்திய மகிழ்ச்சியில் நம்பிக்கையுடன் களம் காண்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.


Advertisement

image

பெங்களூர் அணிக்கு எதிரான கடந்தப் போட்டியில் கேப்டன் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி சதமடித்தார். அதேபோல ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். மேலும் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி ஓவர்களில் அதிரடி காட்டி சிஎஸ்கேவை திக்குமுக்காட செய்தார். இந்த இரு அணிகளும் தங்களது முந்தையப் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளதால் இன்றைய போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தானும், பஞ்சாப்பும் இதுவரை 19 முறை மோதியிருக்கின்றன. இதில், 10 முறை ராஜஸ்தானும் 9 முறை பஞ்சாபும் வென்றுள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகள் மோதிய இரண்டுப் போட்டிகளிலும் பஞ்சாப் வென்றுள்ளது. இந்த இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இன்றையப் போட்டியில் பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கருண் நாயர் மற்றும் ஆல் ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

மேலும், பவுலிங்கை பொறுத்தவரை காட்ரல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி ஆகியோர் ஏற்கெனவே தங்களது திறமையை பதிவு செய்துள்ளனர். அதனால், பஞ்சாப் அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து டிபார்ட்மெண்ட்டுகளிலும் பலமாகவே இருக்கிறது. இதேபோல ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை இளம் வீரர் யாஷ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடக்க வீரரும் கீப்பருமான சஞ்சு சாம்சன் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. அதேபோல மிடில் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித் பலம் சேர்க்கிறார்.


Advertisement

மிக முக்கியமாக இன்றையப் போட்டியில் ஜோஸ் பட்லர் இடம்பிடித்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அசுர பலத்தை பெறும். ஜோப்ரா ஆர்ச்சர், ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் ஆகியோர் ராஜஸ்தான் பவுலிங்கை பார்த்துக்கொள்வார்கள். ஷார்ஜாவின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருப்பதால் பெரிய ஸ்கோரை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

image

இன்றைய போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என புதிய தலைமுறை கணித்துள்ளது அதன்படி,

ராஜஸ்தான் ராயல்ஸில்,... சஞ்சு சாம்சன், யாஷ்வி ஜெய்ஸ்வால், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், ரியான் பராக், டேவிட் மில்லர், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தெவாட்டியா, ஜெயதேவ் உனாத்கட், அங்கித் ராஜ்புத் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாபில்... கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், கிளன் மேக்ஸ்வெல், கருண் நாயர், சர்பராஸ் கான், ஜேம்ஸ் நீஷம், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், காட்ரல், முகமது ஷமி.

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement