இன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

1. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம். எஸ்.பி.பி.யின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய நடிகர் விஜய். பாரதிராஜா, மனோ உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி.

2.இலங்கை தமிழர்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். மஹிந்தா ராஜபக்சவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.


Advertisement

image

3. நாளை கூடுகிறது அதிமுக செயற்குழுக் கூட்டம். முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என தொண்டர்கள் எதிர்பார்ப்பு.

4. தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.


Advertisement

5. பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை. ஹெச்.ராஜா உட்பட யாரும் பட்டியலில் இடம்பெறவில்லை.

6. திருச்சி அருகே பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூச்சு. காலணி மாலை அணிவித்தவர்களை தேடும் காவல் துறை.

7. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட 9 போலீசாருக்கு எதிராக‌ சிபிஐ குற்றப்பத்திரிகை.

8. இன்று இரவு மீண்டும் திறக்கப்படுகிறது கோயம்பேடு காய்கறி சந்தை. நாளை அதிகாலை முதல் விற்பனை தொடக்கம்.

image

9. நாங்குநேரி அருகே முன் விரோதம் காரண‌மாக இரு பெண்கள் வெட்டி கொலை. 12 பேர் மீது 11 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை.

10. எவ்வளவு காலம்தான் இந்தியாவை தள்ளிவைப்பீர்கள்? ஐ.நா. பொது அவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி காட்டம்.

11. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தொடரும் விவசாயிகள் போராட்டம். தேசிய ஜனநாய கூட்டணியிலிருந்து விலகியது சிரோமணி அகாலி தளம்.

12. போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பா. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் 6 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை.

13. ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா. ஐதரபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement