தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தமிழகம் முழுவதும் தடை செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

கேள்வி நேரத்தில் பத்மநாபபுரம் திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால், கழிவு நீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தார். கழிவு நீர் வெளியேறி, வருவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கருப்பண்ணன், இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் ஏற்கனவே தாம் ஆலோசனை நடத்தியதாகத் குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement