பாட்டி இறந்த சோகத்திலும் சிஎஸ்கேவுக்காக விளையாடிய வாட்சன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிஎஸ்கே தொடக்க வீரரான ஷேன் வாட்சனின் பாட்டி உயிரிழந்த நிலையிலும் நேற்றையப் போட்டியில் அவர் பங்கேற்றுள்ளது தெரிய வந்துள்ளது.


Advertisement

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. சிஎஸ்கே தொடக்க வீரரான ஷேன் வாட்சன் 14 ரன்களில் அவுட்டானார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

image


Advertisement

இந்நிலையில், ட்விட்டரில் வீடியோ பதிவொன்றை வெளியிட்ட வாட்சன் "நான் என் குடும்ப உறுப்பினர்களுக்கு என்னுடைய அன்பை அனுப்புகிறேன். என்னுடைய அம்மாவின் அம்மா என்னுடைய பாட்டி இறந்துவிட்டார். இப்போது என்னால் என் குடும்பத்தை சந்திக்க முடியாது. அதனால் என்னுடைய அன்பை அவர்களுக்கு ஆறுதலாக அனுப்புகிறேன்" என்றார்.


Advertisement

வாட்சனின் இந்த வீடியோ பதிவை பார்த்த ரசிகர்கள் உருக்கமாக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே தன்னுடைய காலில் ரத்தம் வழிய வழிய சிஎஸ்கேவுக்காக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் வாட்சன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement