யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்... அதிமுக தான் நம்பர் ஒன் - அமைச்சர் கடம்பூர் ராஜு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சினிமா துறையினர் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் தமிழகத்தில் அதிமுக மட்டுமே நம்பர் ஒன் கட்சியாக இருக்கும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெர்வித்தார்.


Advertisement

மதுரையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும் அம்மா கிச்சனை ஆய்வு செய்த அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

 image


Advertisement

அப்போது, “படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் திரைத்துறை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் நிதிஉதவி வழங்கியுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படாத அளவில் போதுமான நிதி உதவிகளை வழங்கியுள்ளது.

திரையரங்கு திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் திரையரங்கு திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. எனவே மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிய பின்னர் மருத்துவக் குழு அறிவுரையின் பேரில் உரிய நேரத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவிற்கே வழிகாட்டியாக மதுரையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடையின்றி உணவு வழங்கும் அம்மா கிச்சன் செயல்பட்டு வருகிறது என்றவரிடம் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் அரசியலை முன்வைத்து கருத்து தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு சினிமா துறையினர் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் தமிழகத்தில் அதிமுக மட்டுமே நம்பர் ஒன் கட்சியாக இருக்கும் என தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement