'மீனவர் பிரச்னை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகப்படும்' - மோடி, ராஜபக்ச முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் அணுக இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளன.


Advertisement

image

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பிரதமர் மோடி காணொலி முறையில் பேச்சுவார்த்தை நடத்திய போது இம்முடிவு எடுக்கப்பட்டது. மீனவர் பிரச்னை தவிர வர்‌த்தக மற்றும் ராணுவ ரீதியான உறவுகள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் இலங்கையுடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் மோடி தெரிவித்தார்.


Advertisement

image

இலங்கையுடன் புத்த மதம் சார்ந்த உறவுகள் மேம்பாட்டுக்கு 110 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய ராஜபக்ச, இந்திய - இலங்கை நட்புறவு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது எனத் தெரிவித்தார். இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்வான பின் அவர் முதன் முறையாக வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement