அண்ணன் கொலை... நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பாணியில் பழி தீர்த்த தம்பி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அண்ணன் கொலைக்கு பழித்தீர்க்க தம்பி, கொலை வழக்கில் காவல் துறையினர் 7பேரை கைது செய்தனர்.  


Advertisement

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த முன்று தினங்களுக்கு முன்பு கோகுல் (27) என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளிகளை 2 நாட்களில் போலீசார் கைது செய்தனர்.


Advertisement

கோகுல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கை அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டார்.

image

இந்நிலையில், அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலையில் விண்டர்பேட்டை மேம்பாலம் அருகே இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 7 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அரக்கோணம் நன்னுமியான் சாயபு தெருவைச் சேர்ந்த யஸ்வந்த் (23) தலைமையில் சுரேஷ்குமார் (27), சத்தியா (23), வெங்கடேசன் (19), கார்த்திக் (36), ராஜா (48) மற்றும் சுவால்பேட்டையைச் சேர்ந்த யஸ்வந்த் (18) ஆகியோர் இணைந்து கோகுலை கொலை செய்தது தெரியவந்தது.


Advertisement

மேலும், விசாரணையில் நன்னுமியான் சாயபு தெருவைச் சேர்ந்த யஸ்வந்தின் அண்ணன் பிரவீன் என்பவரை கடந்த 15.12.2019 அன்று சசிக்குமார் தலைமையிலான கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் உள்ளனர். 

image

இந்த கொலையில், தொடர்புடையவர்களுக்கும் இறந்த கோகுலுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் உள்ளதால், பழிக்கு பழி வாங்கவே யஸ்வந்த் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து கோகுலை வெட்டிக்கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து இரண்டு கத்திகள், மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement