மக்களின் கருத்துக்களை கேட்டு சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை - வானதி சீனிவாசன்.

There-is-no-need-to-legislate-by-listening-to-the-views-of-the-people---Vanathi-Srinivasan-

மக்களிடம் கருத்துக்களை கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது. என்று பா.ஜ.க துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


Advertisement

 

 


Advertisement

 

image


பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேளாண் சீர்திருத்த மசோதா குறித்து கருத்து கேட்பு மற்றும் விளக்க ஆலோசனை கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பாஜக துணை தலைவர் கனகசபாபதி, வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேறனர்.


Advertisement

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜி.கே.நாகராஜ். இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் வந்துள்ளதாகவும், இங்கு வந்துள்ள பெரும்பாலான விவசாயிகள் புதிய வேளாண் மசோதாவை வரவேற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இந்த மசோதா குறித்து விவசாயிகளிடம் வேண்டுமென்றே தவறான கருத்துகளை பரப்பி எதிர்கட்சிகள் நாடகம் நடத்தி வருவதாகவும், வரும் 28ஆம் தேதி திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் வெற்று அரசியல் எனவும் தெரிவித்தார். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விவசாயிகளுக்கு ஏதுவும் செய்யவில்லை என்றார்.

 

 

image


தற்போது வேளாண் விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லாம் இடைதரகர்கள் தான் எனவும் தற்போது உண்மையான விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்கபட்டு வருவதாகவும் தெரிவித்தார். வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.


இதன் பின்னர் பேசிய பா.ஜ.க துணை தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில் மக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது எனவும் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்கள் கருத்து கேட்காமலே சட்டத்தை இயற்றலாம். அதற்கு சட்டத்தில் உரிமை உண்டு என்றார். பாரத பிரதமர் நரேந்திரமோடி தொழில்துறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்தை விட விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

 
அதேபோல வேளாண் மசோதா குறித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கருத்துக்கு ஏற்கனவே தமிழக முதல்வர் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டார். மத்திய அரசு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது எனவும் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement