சிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை? பிடிவாதத்தை மாற்றுவாரா தோனி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதல்முறையாக ப்ளே ஆஃப் கூட விளையாட முடியாத சூழல் உருவாகுமோ என்ற பீதி தற்போது சென்னை அணி ரசிகர்களை ஆட்கொண்டு விட்டது. தங்களது ஆஸ்தான அணியின் இந்த பரிதாப நிலை, உண்மையிலேயே சென்னை ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்தை அடையச் செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்திருந்த போதும்.., டுபிளசிஸின் அதிரடி ஆட்டமும், தோனி இறுதியில் 3 சிக்ஸர்கள் விளாசியிருந்ததும், 200 ரன்கள் எட்டியதும் சற்றே ஆறுதலாக இருந்தது. ஆனால், டெல்லிக்கு எதிரான போட்டியில் 176 ரன்கள் என்பது அதிகமும் இல்லை, குறைவும் இல்லை என்ற வகையில் சராசரியான இலக்கு தான். அதுவும் டெல்லி அணிக்கு எதிராக பல வெற்றிகளை அசால்டாக குவித்திருந்த சென்னை அணிக்கு மிகவும் எளிதான விஷயம் என்றே எல்லோரும் கருதினார்கள். ஆனால், சென்னை அணியோ 44 ரன்கள் வித்தியாசத்தில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. டுபிளசிஸ்ஸை தவிர சென்னை அணி பேட்டிங்கில் ஒருவரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்யவேயில்லை. அவ்வளவு சொதப்பல். பவுலிங்கையும் சொல்லவே தேவையில்லை. தாராள ரகம் தான்.


Advertisement

image

இப்படியொரு சிஎஸ்கே அணியை இதுவரை சென்னை ரசிகர்கள் பார்த்ததேயில்லை என்றே சொல்லலாம். சென்னை அணியின் கடந்த கால வெற்றிகளுக்கு மிகவும் முக்கியமான காரண கர்த்தாக்களாக இருந்தவர்களான ரெய்னா, இம்ரான் தஹிர், பிராவோ, ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் இந்தத் தொடரில் இன்னும் விளையாடவில்லை.


Advertisement

முதல் போட்டியில் விளாசித் தள்ளிய அம்பத்தி ராயுடுவும் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இப்படி முக்கியமான வீரர்கள் இல்லாமல் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ரெய்னாவும், ஹர்பஜன் சிங்கும் மீண்டும் அணிக்குள் வந்து விளையாடுவதற்கு வாய்ப்புகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பிராவோ மற்றும் இம்ரான் தஹிரை இன்னும் சென்னை அணி பயன்படுத்தாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை.

image

வழக்கமான தோனியின் கேப்டன்சி மிஸ்ஸிங் என எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஆமாம், வழக்கமாக பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப திடீரென பல மாற்றங்களை செய்வார் தோனி. முதல் ஓவரையோ அல்லது அல்லது ஆட்டத்தின் இரண்டாவது ஓவரையோ ஸ்பின்னர்களை வீச வைப்பார். உடனடியாக அதன் பலனாக விக்கெட்டுகளும் வீழ்ந்துவிடும். ஓரிரு போட்டிகளில் ஓய்வு கொடுத்துவிட்டு திடீரென ஹர்பஜன் சிங்கை கொண்டு வருவார், உடனே கைமேல் பலன் கிடைக்கும். போட்டி போகும் போக்கை பந்துவீச்சு மாற்றத்தால் திடீரென கட்டுக்குள் கொண்டு வருவார் தோனி. அதற்கு சுழல் பந்துவீச்சை மிகவும் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார். ஆனால், இந்த முறை சுழல் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா ரன்களை வாரி வழங்கும் வள்ளலாகவே மாறிவிட்டார். ஒவ்வொரு போட்டியிலும் 40 ரன்களுக்கு மேல் கொடுத்தே ஆக வேண்டும் என்ற முடிவில் களத்தில் இறங்குகிறாரோ என்னவோ!. பியூவ் சாவ்லாவும் ரன்களை குறையால் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.


Advertisement

image

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் நிறைய வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், தோனி ஏன் அணியில் மாற்றங்களை கொண்டு வராமல் இருக்கிறார் என்று சரமாரியான கேள்விகள் இப்போது அவரது முன் வைக்கப்பட்டு வருகின்றன.

முதலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், முரளி விஜயை ஏன் தொடர்ந்து அணியில் வைத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் தவறாமல் சொதப்பிவிடுகிறார். ரசிகர் ஒருவர் கிண்டலாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார், முரளி விஜய்க்கு ஏலத்தில் கொடுத்த 2 கோடி ரூபாயை ரெய்னாவின் பால்கனி செலவிற்கு கொடுத்திருக்கலாம் என்று அந்த ரசிகர் குறிப்பிட்டிருந்தார். ஆமாம், ரெய்னா சென்றதற்கு முதல் காரணமாக சொல்லப்பட்டது அவருக்கு அறையில் சரியான வசதி இல்லை என்றும் அதானாலே அவர் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. எப்படியோ முரளி விஜயை ஏலத்தில் எடுத்தது வேஸ்ட் என கிட்டத்தட்ட பெரும்பாலான ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்ட தொடங்கிவிட்டார்கள்.

image

அதேபோல், கேதர் ஜாதவின் ஆட்டமும் டி20 போட்டிக்கு ஏற்றார் போல் இல்லை என்பதை அவரது பேட்டிங்கும் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது. சிக்ஸர்கள் விளாசும் போக்கு அவரிடம் மிகவும் குறைவாகவே உள்ளது. புதுமுக இளம் வீரர் கெய்க்வாட்டும் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பையும் பயன்படுத்த தவறவிட்டார். அதேபோல், சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜாவும் தன்னுடைய சிறப்பான ஆட்டங்களை இதுவரை வெளிக்கொணரவேயில்லை. உலகக்கோப்பை போட்டிகள் உள்பட கடந்த சில வருடங்களாக அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா, தற்போது ஏனோ சென்னை ரசிகர்களை சோதிக்கிறார்.

அத்துடன் தொடர்ந்து அனைத்து போட்டிலும் டாஸ் வெல்லும் தோனி, முதலில் பீல்டிங்கையே தேர்வு செய்கிறார். அது ஏன் என்றால் சென்னை அணியில் மிகப்பெரிய பலமே சேஸிங் என்பதுதான். சிஎஸ்கேவுக்கு என்று சேஸிசிங்கில் ஒரு பாணி இருக்கிறது. அதாவது தொடக்கத்தில் விக்கெட்கள் பெரிதாக விழாமல் தடுப்பாட்டத்தை கையாண்டு, இறுதியில் எதிரணியின் பந்துவீச்சை ஈவு இரக்கமில்லாமல் வெளுத்துவாங்கி யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி வாகை சூடுவது. ஆனால், அந்த பாணி தற்போது சுத்தமாக எடுபடவில்லை என்றே தெரிகிறது. அதனால், தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை மேற்கொள்வதே வெற்றியை உறுதி செய்ய இனி உதவும்.

image

எப்படியிருந்தாலும், முரளி விஜய், கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்களை சில போட்டிகளுக்காகவது மாற்றிவிட்டும் வேறு வீரர்களை வைத்து விளையாட வேண்டும். அதேபோல், பேட்டிங் ஆடரிலும் சரியான யுக்தியை கையாள வேண்டும். அப்படி செய்யாமல் தோனி தொடர்ச்சியாக தன்னுடைய பிடிவாதத்தை கைவிடாமல் இருந்தால் சென்னை அணியின் தோல்வி தொடர் கதையாகிவிடும். அப்புறம் பெங்களூரு அணியின் நிலைதான் சிஎஸ்கேவுக்கும்.

சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை போல ’நம்பிக்கையுடன் காத்திருப்போம். நல்ல விஷயங்கள் ஒருபோதும் மரிப்பதில்லை’. சென்னை அணிக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் இடைவெளி இருக்கிறது. அதனால், நிச்சயம் அவர்கள் புது தெம்புடனும் புதிய யுக்திகளுடன் வருவார்கள் என்று ரசிகர்களும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement