வேளாண் மசோதாக்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஹரியானா பாஜக தலைவர்கள்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாங்கள்  பாஜகவில் இருப்பதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்ப மாட்டோம் என்று அர்த்தமல்ல. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சீர்திருத்தங்கள் ஏற்கனவே வேறு பல நாடுகளில் தோல்வியடைந்துள்ளன என்று ஹரியானா பாஜக தலைவர்களான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பர்மிந்தர்சிங் துல் மற்றும் ராம்பால் மஜ்ரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

image

 


Advertisement

 ஹரியானா பாஜக தலைவர்களான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பர்மிந்தர்சிங் துல் மற்றும் ராம்பால் மஜ்ரா ஆகியோர் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று கூறியுள்ளனர். “கொரோனா வைரஸ் நெருக்கடியால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் விவசாயத்துறையே சில நம்பிக்கையைத் தந்தது. ஆனால் இப்போது, இந்த மசோதாக்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அவர்களின் குரலை நாங்கள் கேட்க வேண்டும்" என்று பர்மிந்தர்சிங் கூறினார்.

ஹரியானா மாநில பாஜக தலைவர் ஓ.பி.தங்கருடன் சந்திப்பு நடத்தியதாக கூறிய பர்மிந்தர்சிங் துல் " குறைந்த பட்ச ஆதார விலைக்கு குறைவாக விளைபொருட்களை வாங்கக்கூடாது என்று உத்தரவாதமளிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். ஒரு விவசாயி வெளியில் விற்றாலும் அல்லது எந்தவொரு தனியார்நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்தாலும், குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான உத்தரவாதம் அளிக்கப்படும் என்பதற்கு சட்டம் இருக்கும் போது, விவசாயிகளின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும்" என்று கூறினார்.

image


Advertisement

 “நான் போராட்டத்தில் கலந்துகொள்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால், விவசாயிகளுடன் தோளோடு தோள் நின்று அவர்களுக்காக குரல் கொடுப்பது முக்கியம். நாம் விவசாயிகளின் குரலைக் கேட்க வேண்டும், இந்த உழவர் மசோதாக்கள் தொடர்பான அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.

 மற்றொரு தலைவரான ராம்பால் மஜ்ரா  பேசும்போது “ஒரு தனியார் நிறுவனம் ஒரு விவசாயியுடன் ஒப்பந்தம் செய்து குறைந்தபட்ச ஆதாரவிலை கடைபிடிக்கப்படாமல் சர்ச்சை ஏற்பட்டால் விவசாயிகள் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டை அணுகலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு சிறிய விவசாயிக்கு பிரச்சினை ஏற்பட்டால், அவர் ஒரு பெரிய நிறுவனத்திற்கு எதிராக போராடுவார் என்று எதிர்பார்க்க முடியுமா? இப்போது, நான் பாஜகவில் இருப்பதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் குரல் எழுப்ப மாட்டேன் என்று அர்த்தமல்ல. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் வேறு பல நாடுகளில் தோல்வியடைந்துள்ளன. அவர்களிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்”என்று கூறினார்.

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement