’காதலியை அனுப்பிவையுங்கள்’ - சிறுவனைக் கடத்தி மிரட்டல் விடுத்த நபர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரபிரதேச மாநிலம் கரேந்தா பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி. இவர் தூரத்து உறவுக்காரரான நான்ஹே தனது 15 வயது மகன் ஜிஷானைக் கடத்திவிட்டதாக போலீஸில் புகார் செய்தார். அந்தப் புகாரில், ஜிஷானின் தாய்மாமா சல்மான், நான்ஹேயின் காதலியுடன் சென்றுவிட்டதாகவும், தன் காதலியை தன்னிடம் திரும்ப அனுப்பிவைத்தால், ஜிஷானை விட்டுவிடுவதாகவும் தன்னிடம் கூறியதாக மன்சூர் தெரிவித்திருந்தார்.


Advertisement

பிரதாப்கார் பகுதியைச் சேர்ந்த நான்ஹேயும், தில்தார் பகுதியைச் சேர்ந்த மௌயிமாவும் சேர்ந்து சிறுவனைக் கடத்தியதாக கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுடைய செல்போன் லொகேஷனை வைத்து கரேலி பகுதியில் அவர்கள் இருப்பதையும் கண்டறிந்தனர். 42 மணிநேர தீவிரத் தேடலுக்குப் பிறகு பிரயக்ராஜ் பகுதியில் சிறுவனை மீட்டுள்ளனர்.

image


Advertisement

போலீஸார் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த தகவலில், நான்ஹே வெளிநாட்டில் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு சமூக ஊடகம் வழியாக பிரக்யராஜ் பகுதியைச் சேர்ந்த அந்த பெண் அறிமுகமாகி இருக்கிறார்.

அதுவே காதலாக மாறி, கண்டிப்பாக இந்தியா வரும்போது திருமணம் செய்துகொள்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதற்கு நடுவில், அந்தப் பெண்ணுக்கு சல்மான் என்பவருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட நான்ஹே எப்படியாவது தனது காதலியை தன்னிடம் வரவைக்கவேண்டும் என இந்தியா வந்திருக்கிறார். அதற்கு தான் திட்டமிட்டபடி சிறுவனைக் கடத்தியதாகக் கூறியிருக்கிறார்.

கொடுமை செய்த கணவர்.. கொரோனா எனக்கூறி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தப்பித்த மனைவி..! 


Advertisement

மேலும் சிறுவனைக் கடத்திய குற்றத்திற்காக இருவரையும் கைது செய்துள்ளனர். 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement