எஸ்பிபியை போற்றுவதே நம் கடமை; அவரது இறுதி பயணத்தை அரசு மரியாதையோடு அனுப்பி வைப்பதே நமது பெருமை என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எஸ்பிபி மறைவு குறித்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். தனது பாடல்கள் மூலம் மக்களின் மனத்துயரத்தை துடைத்தெறிந்தவர். அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். அவரது மறைவு இசயுலகிற்கு பேரிழப்பு. மண்ணை விட்டு மறைந்தாலும் காற்றில் கரைந்திடா அவரது கானங்கள் மூலம் காலங்கள் கடந்து வாழந்து கொண்டிருப்பார்.
கூவும் குயில்போல, தாலாட்டும் தாய்போல நம்மை தம் நாவால் வசப்படுத்திய தேன்குரலாளர்,
தனது பாடல்கள் மூலம் மக்களின் மனத்துயரை ஆற்றிய பெருங்கலைஞர் ஐயா பாலசுப்பிரமணியம் அவர்களை போற்ற வேண்டியது நமது கடமை. அவரது இறுதிப்பயணத்தை அரசு மரியாதையோடு அனுப்பி வைப்பதே நமது பெருமை!@CMOTamilNadu pic.twitter.com/O3FeFyb5ne— சீமான் (@SeemanOfficial) September 25, 2020Advertisement
கலை, இலக்கியத்தை போற்றாத எந்த சமுதாயமும் மேம்படாது. எஸ்பிபியை போற்றுவதே நம் கடமை; அவரது இறுதி பயணத்தை அரசு மரியாதையோடு அனுப்பி வைப்பதே நமது பெருமை. எனவே அவரது இறுதி ஊர்வலைத்தை அரசு மரியாதையோடு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்
பகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
ரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி