பண்ணை வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் எஸ்பிபி உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி இல்லை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாடகர் எஸ்பிபியின் உடல் சென்னை தாமரை பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.


Advertisement

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த எஸ்பிபி-ன் உடலுக்கு திரைபிரபலஙகள் அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பொதுமக்களும் ரசிகர் பட்டாளமும் எஸ்பிபி வீட்டின் முன்பு குவிந்தனர்.

image


Advertisement

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து எஸ்பிபியின் உடல் பண்ணை வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. எஸ்பிபியின் உடல் நாளை தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

அங்கு பொதுமக்கள் எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 2கி.மீட்டருக்கு முன்னதாகவே வாகனத்தணிக்கை செய்யப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement