விஜய் தேவாரகொண்டா தனது அம்மாவின் 50வது பிறந்த நாளுக்காக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வளர்ந்து வருகிறார். இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி படம் மூலம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழிலும் பல ரசிகர்கள் ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு திரைப் பிரபலங்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டது. தமிழை பொருத்தவரை நடிகையர் திலகம், நோட்டா, தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
View this post on InstagramI'll make sure you are happy forever ?❤️ Happy Birthday Mumma!
AdvertisementA post shared by Vijay Deverakonda (@thedeverakonda) on
ஃபைட்டர் என்ற ஹிந்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய் தேவாரகொண்டா. இது பாலிவுட்டில் அவரது முதல் படம். அந்த படத்தில் விஜய் தேவாரகொண்டாவுக்கு ஜோடியாக இளம் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடிக்கிறார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பை பூரி ஜெகநாத் இயக்குகிறார். தற்போது கொரோனா காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது அம்மாவின் 50வது பிறந்த நாளை வீட்டில் எளிய முறையில் கொண்டினார். அப்போது கிரிக்கெட் போட்டியில் அரைசதம் அடிப்பதைப் போல அம்மாவுடன் இணைந்து 50 அடிப்பது போல சைகை செய்து வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் விஜய் தேவாரகொண்டா. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை