போச்சம்பள்ளி அருகே கோயில் காளையின் தலையில் கடப்பாரையால் குத்திய மர்மநபர் - ரத்தவெள்ளத்தில் கிராமத்து கோயில் முன்பு தஞ்சமடைந்த காளை.
போச்சம்பள்ளி அடுத்த வானிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எ-ரெட்டிபட்டி கிராமத்தில் சுமார் பதினைந்து வயது மதிக்கத்தக்க காளைமாடு ஒன்றை கிராம மக்கள் சார்பாக வளர்த்து வருகின்றனர். இக்காளை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் உரிமையுடன் சென்று உணவு கேட்டு வாங்கி உட்கொள்ளும் பழக்கம் கொண்டது. அக்கிராமத்தைச் சேர்ந்த சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்காளையை அன்பாக பார்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் இன்று காலை கிராம மக்கள் வழக்கம் போல் தங்களது பணிகளை செய்து கொண்டிருந்தபோது, கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள கோயில் முன்பு தலைப்பகுதியில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வந்த காளை கோயில் முன்பு படுத்துக்கொண்டது. தலை முழுவதும் ரத்தக் கறையுடன் இருந்ததைக் கண்ட கிராம மக்கள் பேரதிர்ச்சி கொண்டனர்.
உடனடியாக அரசு கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர் தலையில் காயம்பட்டிருந்த காளைக்கு சிகிச்சை அளித்தார். அப்போதுதான் காளையின் தலைப்பகுதியில் கடப்பாரை கொண்டு மர்ம நபர் குத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து எ-ரெட்டிபட்டி கிராம மக்கள் கல்லாவி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் கொரப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு நபரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் காளையை கடப்பாரையால் தலையில் குத்திய சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?