மேகாலயாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர்.
மேகாலயாவின் மவ்னி, கிழக்கு காசி மலைப்பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகளின் மேல் மண் சரிந்ததில் சிக்கி ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் காணாமல் போயுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “30 வயதான ரசியா அகமதுவின் உடல் குப்பைகளில் இருந்து மீட்கப்பட்டது. மேலும் ஐந்து பேரை இன்னும் காணவில்லை. ரசியா அகமது பல தேசிய போட்டிகளில் மேகாலயாவுக்காக விளையாடியுள்ளார். 2011-2012 ஆம் ஆண்டு முதல் ரசியா அகமது மேகாலயாவுக்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
இயற்கை பேரழிவால் அவரது திடீர் மறைவுக்கு ரசியாவின் அணியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாங்கள் ரசியாவை இழப்போம். அவளுடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் என ககோலி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
Loading More post
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!