அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார் - எஸ்.பி.பி. மறைவுக்கு வைகோ இரங்கல்

Vaiko-mourns-the-passing-sp-balasubramaniam

எஸ்.பி.பி.யின் கானக் குரல் இன்னும் எவ்வளவு காலமானாலும் காற்றோடு கலந்திருக்கும் என இரங்கல் தெரிவித்துள்ளார் வைகோ. 


Advertisement

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், 

''தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது.


Advertisement

உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும், யாழ் மீட்டுவது போன்ற அவரது கானக் குரல் இன்னும் எவ்வளவு காலமானாலும் காற்றோடு கலந்திருக்கும். கேட்போரைக் காந்தமெனக் கவர்ந்திழுக்கும். திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார்.

அந்தப் பாடல் இசை மேதையை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கணக்கற்ற அவரது ரசிகர்களுக்கும், அவரை உயிராய் நேசித்த கலை உலகப் பெருமக்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement