ஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

50 நாட்களுக்கு மேலாக தொடர் சிகிச்சையில் இருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 74


Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பி. தான் நலமுடன் இருப்பதாகவும், லேசான அறிகுறி ஏற்பட்டதால் சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதே நேரம், எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீரடைந்து வருவதாக புதிய தலைமுறைக்கு அவரது மகன், எஸ்.பி.பிசரண் தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டி ஆகஸ்ட் 16 ஆம் தேதி திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.


Advertisement

image

அதற்கு அடுத்த இரு நாட்களில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.செப்டம்பர் 1‌ஆம் தேதி மீண்டும் வீடியோ வெளியிட்ட எஸ்பிபி சரண், எஸ்.பி.பிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தனது தங்கை பல்லவியை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தா‌ர்.

செப்டம்பர் 7 ஆம் தேதி நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னை வேகமாக குணமடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் கூறினார்.செப்டம்பர் 8 ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தது.இதைத் தொடர்ந்து ‌எஸ்.பி.பி. கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும், அந்த நல்ல செய்திக்காகவே தாம் காத்திருந்ததாகவும் எஸ்.பி.பி. சரண் தெரிவித்திருந்தார்.


Advertisement

image

இந்தச் சூழலில் எஸ்.பி.பியின் உடல்நிலை தற்போது மீண்டும் மிகவும் மோசமடைந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. எஸ்பிபியின் உயிரிழப்புக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

loading...
Related Tags : Spb Spb passed way

Advertisement

Advertisement

Advertisement