கேரள சுகாதாரத் துறைக்கு ஐநா விருது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தொற்றாத நோய்கள் மற்றும் மனநோய்களைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்புக்காக கேரள மாநில சுகாதாரத் துறைக்கு ஐநாவின் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மக்களுக்கான சுகாதாரப் பணிகளில் முன்னணியில் உள்ள கேரள அரசின் பங்களிப்பைப் பாராட்டி UNIATFஎன்ற விருதை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ராய்சஸ் அறிவித்துள்ளார்.


Advertisement

image

முதன்முறையாக கேரள அரசு பெறும் சர்வதேச அங்கீகாரம் இதுதான். உலகம் முழுவதும் நோய்களைக் கட்டுப்படுத்தும் சேவைகளுக்காக பாராட்டப்படும் ஏழு சுகாதார அமைச்சகங்களில் கேரளாவும் ஒன்றாக இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் எளிதில் தொற்றாத நோய்கள் மற்றும் மனநோய்களைக் கட்டுப்படுத்திய கேரள அரசின் பணிகளுக்கு இந்த விருது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.


Advertisement

image

"இந்த விருது எங்களுடைய ஓய்வற்ற பணிகளுக்குக் கிடைத்த பாராட்டு" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா. "மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வசதிகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் அதிகரித்த காலக்கட்டத்திலும், எளிதில் பரவாத நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினோம்" என்கிறார் அவர்.

மேலும், ஐநா விருதுக்குக் காரணமாக இருந்த அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் அமைச்சர் சைலஜா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


Advertisement

“மண்கொத்தியே வருக வருக”- பறவைகளை வரவேற்று சுவரொட்டி.!

 

loading...

Advertisement

Advertisement

Advertisement