மண்ணெண்ணெய் விலை உயர்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம்.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஏழை மக்கள் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ஏழை மக்கள் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தியது கண்டனத்திற்குரியது. வாங்கும் சக்தியை இழந்திருக்கும் எளிய மக்களின் முதுகில் இரக்கமற்ற அதிமுக அரசு மேலும் சுமையை ஏற்றுவது ஏன்? விலை உயர்வை அரசே ஏற்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்


Advertisement

பெரும்பான்மை ஏழை, எளிய மக்களின் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலை நியாய விலைக் கடைகளில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  15 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய் விலை 16.50 ரூபாயாக உயரும் என்று தெரிகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement