பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது ? இன்று அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தலைமை‌ தேர்‌தல் ஆணையர் சுனில் அரோரா, டெல்லியில் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்திக்கிறார்.


Advertisement

அப்போது, பீகார் தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறார். கொரோனா பரவல் காலம் என்பதால் தேர்தலை நடத்த சவாலாக இருக்கும் ‌என்பதை கருத்தில் கொண்டு, பீகாருக்கு செ‌ன்று கள நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என சுனில் அரோரா கூறியிருந்தார்.

பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பேரவையின் பதவிக்காலம் அக்டோபர் 29 ஆம் தேதி நிறைவடைகிறது. முன்னதாக கொரோனா காலத்தில் தேர்தல் நடந்தால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆ‌ணையம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement