மூதாட்டிகளை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை: 3 பெண்களை வளைத்து பிடித்த பொதுமக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருமயம் அருகே உள்ள ஒரு அறையில் இரண்டு மூதாட்டிகளை கட்டிப்போட்டு 4 சவரன் நகை 12 ஆயிரம் ரொக்கம் திருடிச் சென்ற மூன்று பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையை சேர்ந்தவர் அம்பாள்(90). அவரது மகள் உமையாள்(70). இவர்கள் இருவரும் விராச்சிலை பழைய ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு வீட்டின் உள்ளே புகுந்த மூன்று பெண்கள்‌ 2 மூதாட்டிகளை கட்டிப்போட்டு விட்டு அவர்கள் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகை மற்றும் வீட்டில் இருந்த 12,000 ரூபாய் பணத்தை திருடி சென்றனர். அப்போது மூதாட்டிகள் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து ஆட்டோவில் தப்பித்துச் செல்ல முயன்ற மூன்று பெண்களையும் பொதுமக்கள் பிடித்து பனையப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Advertisement

விசாரணையில்‌ சென்னையை சேர்ந்த ஸ்ரீவித்யா, ஆவணி பட்டியைச் சேர்ந்த தெய்வானை, கீழச்செவல் பட்டியைச் சேர்ந்த கருப்பாயி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 4 பவுன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

loading...

Advertisement

Advertisement

Advertisement