புதிய தலைமுறை செய்தி எதிரொலியால், கொடைக்கானலில் பிரபலமாகாத அருவிகளை சுற்றுலா தலமாக மேம்படுத்தி, பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த சாத்தியக் கூறுகள் உள்ளதா என, சுற்றுலாத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலைப்பகுதிகளில் இருக்கும் பார்த்த இடங்களையே மீண்டும் மீண்டும் பார்க்கும் நிலையை மாற்றி ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு அருவிகள், ஆதிமனிதன் குகைவாழ் இடங்கள் உள்ளிட்டவைகளை சுற்றுலா பட்டியலில் சேர்த்து, அங்கு செல்ல தேவையான பாதைகள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என, புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை வல்லுனர் ஆய்வுக்குழு ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். அதில் பேத்துப்பாறை ஆதிமனிதன் குகைகள், அஞ்சுவீடு அருவி, பாரதி அண்ணாநகர் ஓராவி அருவி, பள்ளங்கி கொட்டிவரை அருவி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்பு அந்த பகுதிகளுக்கு செல்ல பாதைகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என, உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் தலைமையில் ஆய்வுகள் செய்தனர். மேலும் ஆய்வுப்பணி மேல்மலைப்பகுதிகளில் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!