கொரோனா தொற்றை சீக்கிரமே கண்டறிந்து சிகிச்சை செய்வதால் பலன் உண்டா என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
வெறும் காய்ச்சல் மட்டுமே இருந்து இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படாமலும் கொரோனா தொற்று நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துமா?
ஆம். வெறும் காய்ச்சல் மட்டுமே அறிகுறியாக இருந்து இருமல் எதுவும் ஏற்படாமலும் பலருக்கு நுரையீரலில் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆக்சிஜன் அளவுகள் குறைந்ததை அனுபவ ரீதியாக கண்டுள்ளேன்
கொரோனாவில் காய்ச்சல் எத்தனை உக்கிரமானதாக இருக்கும்?
ஏனைய ப்ளூ போன்ற வைரஸ் காய்ச்சல்கள் போல மிதமான அளவு காய்ச்சல் (100 டிகிரி) அளவில் அல்லது மிக அதிகமாக (102-104 டிகிரி வரை) கூட அடிக்கும். சிலருக்கு காய்ச்சல் பெரிதாக அடிக்காமல் வெறும் உடல் வலி / உடல் சோர்வு போன்றும் முதல் அறிகுறி தென்படுகிறது. டெங்கு வைரஸ் காய்ச்சலில் மிக உக்கிரமான காய்ச்சல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
காய்ச்சல் தோன்றி பிறகும் இருமல் வரத்தொடங்கியிருக்கிறது. இதை சாதாரண ப்ளூ என்று கொள்வதா? கொரோனாவுக்கு என்று தனியாக ஏதேனும் அறிகுறிகள் இருக்கின்றனவா?
காய்ச்சல் தொடங்கிய நாள் - நோய் குறியின் முதல் நாளாகும். ஒருவேளை காய்ச்சல் இல்லாமல் இருமல் தோன்றினால் இருமல் தோன்றிய நாள், நோய் அறிகுறியின் மூன்றாவது நாளாகும்
கொரோனா வைரஸும் ஏனைய சுவாசப்பாதை வைரஸ் தொற்றுகள் போலவே இருப்பதால் தனியாக பிரத்யேக அறிகுறிகள் இல்லை
இருப்பினும் வாசனை நுகர்தல் திறன் இழப்பு மற்றும் சுவைத்தல் திறன் இழப்பு ஆகிய இரண்டையும் கொரோனா தொற்றின் பிரத்யேக அறிகுறிகளாக கூறமுடியும்
உங்களுக்கு நுகர்தல் திறன் இழப்பும் சுவைத்தல் திறன் இழப்பும் இருந்தால் 99.9% கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றே கொள்ளலாம்
உடனே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்; பரிசோதனை செய்யுங்கள்; கொரோனா சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரையின் பேரில் துவங்குங்கள்.
கொரோனா தொற்றை சீக்கிரமே கண்டறிந்து சிகிச்சை செய்வதால் உண்மையிலேயே பலன் உண்டா?
ஆம். கொரோனா தொற்றை அறிகுறிகள் தோன்றிய முதல் வாரத்தின் முற்பகுதிகளிலேயே கண்டறிந்து, அதற்குரிய மருத்துவங்களை எடுத்து தொடர்ந்து கண்காணிப்பு வளையத்துக்குள் வருபவர்களில் வயது வித்தியாசமின்றி பெரும்பான்மையினருக்கு உயிரிழப்பு நேர்வதில்லை
முதல் வாரத்தை எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் கழித்து விட்டு எந்த சிகிச்சையும் எடுக்காமல் இரண்டாவது வாரத்தில் மூச்சுத்திணறல் நிலை அடைந்தவுடன் சிகிச்சைக்கு வரும் மக்களுக்கே அதிகமான அளவில் மரணம் நேருகிறது.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?