திமுக உறுப்பினர் சேர்க்கையில் ட்ரம்ப்பை சேர்த்தது நியாயமா? ஆர்.பி உதயகுமார்

Is-it-fair-to-include-Trump-in-the-DMK-membership-R-P-Udayakumar

திமுக உறுப்பினர் சேர்க்கையில் ட்ரம்ப்பை சேர்த்தது நியாயமா? என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

image

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “ திமுகவில் உறுப்பினர் சேர்கை போலியாக நடைபெறுகிறது. திமுக உறுப்பினர் சேர்க்கையில் ட்ரம்ப்பை சேர்த்தது நியாயமா? ஒரு காலத்தில் மன வலிமையோடு போராடிய திமுகவின் போராட்டம் தற்போது வீட்டு வாசல் வரை மட்டுமே உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் திமுக சிதர் தேங்காய் போல் சிதைந்து காணாமல் போய் விடும்.


Advertisement

இளைஞர்களால் ஆல்பாஸ் முதல்வர் என தமிழக முதல்வர் அழைக்கப்படுகிறார். அரியர்ஸ் ஆல்பாஸ் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகியது யார் என்பது 20 லட்சம் மாணவர்களுக்கு தெரியும். இளைய சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு அரியர்ஸ் ஆல்பாஸ் முறையை முதல்வர் அறிவித்துள்ளார்” என்று பேசினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement