ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி இவர்தான்!

Shivangi-Singh-to-be-first-Rafale-woman-fighter-pilot-Rajat-Pandit

ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமான ஓட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் வாரணாசியை சேர்ந்த ஒருவர்!


Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள வாரணாசியை சேர்ந்த சிவாங்கி சிங் என்ற பெண் விமானி, அம்பாலாவைத் தளமாகக் கொண்ட ஐ.ஏ.எஃப்.-இன் புதிய ரஃபேல் போர் விமானம் இயக்குவதற்கு பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ரஃபேல் போர் விமானம் ஓட்டுவதற்கு தேர்வு செய்யப்படும் முதல் பெண் இவரே ஆவார். .

image


Advertisement

சிவாங்கி சிங் 2017-இல் விமானப்படையில் சேர்ந்தார். ஐஏஎஃப்-இல் சேர்ந்த பிறகு, அவர் மிக் -21 பைசன் விமானத்தை இயக்கி வந்தார்.

விமானம் ஓட்ட வேண்டும் என சிறு வயது முதலே கனவாக இருந்ததாக கூறும் சிவாங்கி சிங், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார். அதன்பின் தேசிய சாரணர் படையில் சேர்ந்து பணியாற்றி வந்த இவர் இந்திய விமான படை அகாடமியில் சேர்ந்தார்.

தற்போது விமான லெப்டினன்ட் ஆக பதவி வகிக்கும் சிவாங்கி சிங்குக்கு ரஃபேல் விமானம் இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சிவாங்கி சிங் அம்பாலாவில் இருக்கும் கோல்டன் ஏரோ என்கிற 17-வது படையில் சேர உள்ளார்.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement