பல்துலக்கும்போது பிரஸை விழுங்கிய நபர்... அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பல் துலக்குகையில் தொண்டையின் பின்புறத்தை சுத்தம் செய்ய முயன்றபோது, 19 சென்டிமீட்டர் நீளமுள்ள பிரஸை தற்செயலாக விழுங்கிய ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.


Advertisement

image

செப்டம்பர் 15 ஆம் தேதி, அருணாச்சலின் ரோயிங் லோவர் திபாங் பள்ளத்தாக்கில் வசிக்கும் 39 வயது நபர் காலையில் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் தொண்டையின் பின்புறத்தை சுத்தம் செய்ய முயன்றபோது, 19 சென்டிமீட்டர் நீளமுள்ள பிரஸை தற்செயலாக உள்ளே விழுங்கினார்.


Advertisement

பின்னர் அவரை பேக்கின் பெர்டின் பொதுமருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது அங்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். ஆனால் அதில் அவரின் உணவுக்குழாயில் பிரஸை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அறுவை சிகிச்சை நிபுணர் பிரஸ் வயிற்றுக்குள் நுழைந்திருக்க வேண்டும் என்று பரிந்துரைத்து, லேபரோடமி பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதிர்ஷ்டவசமாக, பல் துலக்குதலை உட்கொண்ட பிறகு அவர் அதிக வலியை அனுபவிக்கவில்லை, மேலும் அவரது அடிவயிற்றில் ஒரு சிறிய அசெளகரியம் மட்டுமே இருந்தது. அதன்பின் அவரது அடிவயிற்றில் இருந்து பிரஸை எடுப்பதற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. "அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய 30- 35 நிமிடங்கள் ஆனது, அதன்பின் அவரது அடிவயிற்றில் இருந்து பிரஸ் எடுக்கப்பட்டது. தற்போது நோயாளி பிபிஎம்ஹெச்சில் உள்ள அறுவை சிகிச்சை வார்டில் வைக்கப்பட்டுள்ளார், அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று டாக்டர் போம்னி தயெங் கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement