கங்கனா ரனாவத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை?: சாடிய நக்மா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கங்கனா ரனாவத்திற்கு அதிகாரிகள் ஏன் சம்மன் அனுப்பவில்லை என நடிகை நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

சுஷாந்த் சிங் இறப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது காதலி ரியா சக்ரவர்த்தியிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் பாலிவுட்டின் முக்கிய பிரபலங்களின் பெயர்களை கூறியதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங்க் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது காங்கிரஸ் பிரமுகரும் நடிகையுமான நக்மா கங்கனா ரனாவத்திற்கு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் ஏன் சம்மன் அனுப்பவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் “ போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில், போதைப்பொருள் கடத்தல் பிரிவு ஏன் கங்கனா ரனாவத்திற்கு சம்மன் அனுப்பவில்லை. வாட்ஸ் ஆப் உரையாடல்களின் அடிப்படையில் முன்னணி நடிகைகளுக்கு சம்மன் அனுப்பியுள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொது வெளியில் அவர்களின் பிம்பத்தை களங்கப்படுத்தவே அவர்களின் விவரங்களை ஊடகங்களில் வெளியிட்டுள்ளது” எனச் சாடியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement