தென்காசி அருகே கண்பார்வை குறைபாட்டால் வேலையிழந்த வேதனையில் அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாறைகுளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (48). இவர் அரசு போக்குவரத்துக் கழக புளியங்குடி பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். செல்வகுமாருக்கு கண் பார்வை குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆறு மாதங்களாக பணி வழங்கப்படவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.
இதனால் மனமுடைந்த செல்வகுமார் கடந்த 19ம் தேதி விஷம் குடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவரது மகன் நவீன் (12) குடும்ப பிரச்னை காரணமாக கடந்த ஆண்டு தற்கொலை செய்தார். மகனை தொடர்ந்து தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வகுமாருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
Loading More post
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!