ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதல் போட்டியில் வென்ற உற்சாகத்திலும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி முதல் வெற்றியை பதிவு செய்யவும் ஆயத்தமாகி வருகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 12 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளும் சம வெற்றியை பெற்று இருக்கின்றன. ஆனால் கடந்த 5 போட்டிகளில் பெங்களூரு அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது. ஆம் கடைசியாக நடந்த 5 போட்டிகளில் பெங்களூரு அணி 4 முறை பஞ்சாப் அணியை வென்றுள்ளது. அதிலும் கடைசி 4 போட்டிகளை பெங்களூரு அணி தொடர்ச்சியாக வென்றுள்ளது. இதே மைதானத்தில் 2014 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது அந்த அணிக்கு சற்றே சாதகமான அம்சம்.
அப்போது பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் 774 ரன்களை குவித்துள்ளார். அதேபோல பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ் பெங்களூரு அணிக்கு எதிராக மட்டும் 266 ரன்களை எடுத்துள்ளார். மேலும் பவுலிங்கில் பஞ்சாபின் சந்தீப் சர்மா 16 விக்கெட்டையும், பெங்களூரின் சஹால் 19 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதிகபட்சமாக பஞ்சாப் அணி ஒரு முறை 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களும், பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 226 ரன்களும் குவித்துள்ளது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?