விஜயகாந்த் விரைவில் நலம்பெற மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர்.


Advertisement

 image

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

 தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த்  அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement