சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, நாளை நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
13-ஆவது ஐபிஎல் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. அந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் அம்பத்தி ராயுடு பிரமாதமாக விளையாடி 72 ரன்களை விளாசினார். அன்றையப் போட்டியில் அம்பத்தி ராயுடுவின் பங்களிப்பு சென்னை அணிக்கு வெற்றியை சாதகமாக்கியது.
இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவதுப் போட்டியில் ராயுடு களமிறங்கி கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் போட்டியில் ராயுடு காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோற்றதற்கு ராயுடு அணியில் இடம் பெறாமல் போனதும் காரணம் என கூறப்பட்டது.
அரசு கல்லூரிகளில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகள்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு
இந்நிலையில் நாளை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ராயுடு விளையாட வாய்ப்பில்லை என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளோர். இது குறித்து அவர் கூறும் போது “ அவரது உடல்நிலை குறித்து கவலையடைய ஒன்றுமில்லை. அவருக்குத் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அடுத்து வரும் ஒரு போட்டியில் விளையாடமால் இருப்பார். ஆனால் சரியான நேரத்தில் அவர் ஆட்டத்தில் பங்கேற்க தயாராகவும் இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை