முதல்முறையாக அப்படி கேட்டதும் குலுங்கி சிரித்தோம் –ஐஸ்வர்யா ராய்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
திருமணமானதும் முதல்முறையாக திருமதி பச்சன் என்று அழைக்கப்பட்ட தருணத்தை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
 
முன்னாள் உலகி அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்கிற மகள் இருக்கிறார்.
 
தனது திருமணம் குறித்த தருணத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்,
 
image
 
‘’திருமணமானதும் நானும் அபிஷேக்கும் தேனிலவை கழிப்பதற்காக போரா போரா தீவிற்கு விமானத்தில் புறப்பட்டோம். அப்போது விமான பணிப்பெண், ‘திருமதி பச்சன்’ என்று என்னை அழைத்து வரவேற்றார். இதைக் கேட்டதும் அபிஷேக்கும் நானும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம்.
 
அது என்னை வித்தியாசமாக உணர்த்தியது. 'ஆம் நான் திருமணம் செய்து கொண்டேன். நான் திருமதி பச்சன் தான்’ என நினைத்துக் கொண்டேன்’’ என்றார்.
 
 
loading...

Advertisement

Advertisement

Advertisement