‌கொரோனாவுக்காக மூக்கு வழி‌யாக விடும் சொட்டு ‌மருந்து... தயாரிப்பில் இந்திய நிறுவனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவுக்கு தடுப்பு ‌மருந்தாக மூக்கு வழியாக விடும் சொட்டு மருந்தை‌ தயாரிக்கு‌ம் ஒப்பந்தத்தை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது. செலவு குறைப்பு, குறைந்த விலை, அதிக தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 100 கோடி சொட்டு மருந்தை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


Advertisement

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த சொட்டு மருந்தை ஹைதரபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தம் அந்த பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு, விநியோகம் ஆகிய உரிமைகளையும் பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது.

image


Advertisement

எனினும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா விநியோக உரிமையை வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகமே வைத்துக் கொண்டுள்ளது. கோவிஷீல்டு, ஸ்புட்நிக் போன்ற கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகள், ஊசிகள் மூலம் போடப்படுவதால், அதற்கான ‌செலவு அதிகரிக்கும் என்றும், ஆனால் நேரடியாக மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்தை கண்டுபிடித்திருப்பதால், செலவு குறையும் என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

image

மூக்கு வழியாக விடப்படும் ‌இந்த சொட்டு மருந்து கொரோனா வைரஸ் ‌பரவலை தடுப்பது மட்டுமின்றி, செல்களில் நோய் எதிர்ப்பு ‌சக்தியையும்‌ கூட்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் பரவும் மூக்கு மற்றும் தொண்டை பாதைகளிலும், மருந்து உடனடியாக செயல்படும் என்பதால், முதற் கட்டத்திலேயே வைரஸ் உடலுக்குள் பரவுவதை நிறுத்தி விடும் எனவும் சொட்டு மருந்தை கண்டு‌பிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்‌.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement