கைதி தப்பி ஓட்டம்; மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடி அருகே கைதியை தப்பவிட்ட மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்ற தெய்வகுழந்தை என்பவரை இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த 20-ம் தேதி புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்க சென்று கொண்டிருந்தபோது கைதி மாயகிருஷ்ணன், ஓடும் காரில் இருந்து குதித்து போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். மீண்டும் தனிப்படையினரால் 22-ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Advertisement

இதனையடுத்து மாயகிருஷ்ணன் என்ற தெய்வக்குழந்தை தப்பி ஓடிய போது, கைதி வழிக்காவல் பணியில் அசட்டையாக பணிபுரிந்ததாக கூறி, புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் சுடலைமுத்து ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement