புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதிய தலைமைத்தேர்தல் ஆணையராக குஜராத் முன்னாள் தலைமைச் செயலாளர் அச்சல்குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் வியாழனன்று பதவி ஏற்கிறார்.


Advertisement

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி வரும் 6-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில் குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் அச்சல் குமார் ஜோதியை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஓப்புதல் அளித்தார். இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையராக குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர் வரும் ஜுலை 6 -ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்பார் என்று சட்டத்துறை அறிவித்துள்ளது. இவர் அடுத்து வரும் மூன்று வருடங்கள் பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 1957ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு சேர்ந்த அச்சல் குமார் ஜோதி, குஜராத் முன்னாள் தலைமை செயலாளரராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement