காதலிகளுடன் சண்டை... ஒரே நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.


Advertisement

உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் விஷ்ணு குப்தா(17 வயது) மற்றும் பிட்டு(18 வயது). இவர்கள், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், 11ஆம் வகுப்புச் சேர்க்கைக்காக தங்கள் கிராமத்திலிருந்து அருகில் உள்ள ராணிப்பூர் என்ற ஊருக்கு கடந்த திங்கட்கிழமை சென்றிருக்கின்றனர்.

பள்ளிச் சேர்க்கை ஒருபுறம் இருக்க ராணிப்பூரைச் சேர்ந்த தங்கள் காதலிகளைப் பார்க்க அவர்கள் கிராமத்திற்குச் சென்றிருக்கின்றனர். அந்த இரண்டு பெண்களுக்கும் ராம்லீலா மைதானத்தில் இவர்களை சந்தித்திருக்கின்றனர். அப்போது காதலிகளுக்கும், அந்த இரண்டு இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.


Advertisement

image

இதனால் மனமுடைந்த இளைஞர்கள், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கின்றனர். விஷ்ணு குப்தா ராம்லீலா மைதானத்திலேயே இறந்து கிடந்திருக்கிறார். பிட்டுவும் அந்த பகுதியிலேயே சுயநினைவின்றி கிடந்திருக்கிறார்.

அவரை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, வாரணாசிக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி இருக்கின்றனர். இதற்கிடையே விஷாலின் தந்தை அந்த இரண்டு பெண்கள்மீது போலீஸில் வழக்குப்பதிவு செய்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த அறிக்கையில் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.


Advertisement

காதல் விவகாரத்தில் 17, 18 வயதே ஆன இரண்டு பள்ளியில் படிக்கும் இளைஞர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திருமணத்திற்குப் பிறகு புறக்கணித்த காதலி - வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் 

loading...

Advertisement

Advertisement

Advertisement