கடலூர் அருகே கிராம மக்கள் குடிக்கும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பொன்னால்லகரம் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி சார்பில், காலையும், மாலையும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை குடிநீருக்காக அப்பகுதி மக்கள் காத்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது குடிநீர் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை நிறத்தில் வருவது தெரிந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதிவாசி ஒருவர், யாரும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் சோதனை செய்ததில் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் முற்றிலுமாக நீக்கப்பட்டது.
நம் இனிய ’பெண்’ நிலா! – நடிகை ஷோபாவின் பிறந்தநாள் இன்று!
இது தொடர்பாக போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது. நீரில் ஏன் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டது. ஏதும் தனிநபர் விரோதமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்ட குடிநீர் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!