முயற்சி செய்ததுபோல கூட தெரியவில்லை; தோனிக்கு மார்க் போட்ட சேவாக்...!

Looked-like-MS-Dhoni-wasn-t-even-trying-will-rate-his-captaincy-4-out-of-10-Virender-Sehwag

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில், தோனியின் கேப்டன்சிக்கு முன்னாள் வீரர் சேவாக் 10 க்கு 4 மதிப்பெண்களை அளித்துள்ளார்.


Advertisement

இது குறித்து சேவாக் பேசும்போது “ மும்பை சென்னை அணிக்கிடையேயான போட்டியில் இளம் வீரர் சாம் கரனை தோனி தனக்கு முன்னதாகவே களம் இறக்கி சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். ஆனால் அதே முடிவுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் அணியைத் தோல்விப் பாதைக்கு அழைத்துச் சென்றது. மிடில் ஓவர்களில் களம் இறங்கிய தோனியின் பேட்டிங், டார்க்கெட்டை அடைய முயற்சி செய்ததுபோல தெரியவில்லை.

image


Advertisement

இறுதி ஓவர்களில் தோனி விளாசிய மூன்று சிக்ஸர்கள் அணியின் ரன்னை டார்க்கெட்டிற்கு மிக அருகில் கொண்டு சென்றது. ஆனால் உண்மை இங்கு வேறுவிதமாக இருக்கிறது. தோனி வீணாக்கிய பந்துகளை பார்க்கும்போது அவர் டார்கெட்டை அடைய முயற்சி செய்யவில்லை என்றே தோன்றியது.

சாம் கரன் அவுட்டான பின்னரே தோனி அடித்து ஆடியிருக்க வேண்டும் அல்லது ரவிந்திர ஜடேஜாவை அனுப்பியிருக்க வேண்டும். மிடில் ஆர்டரில் தான் ரன் ரேட்டானது அதிகளவு குறைந்தது. அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இறுதி ஓவரில் சென்னை அணி வெற்றி பெறுவதற்கு 20 லிருந்து 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டிருக்கும். ஆனால் இறுதி ஓவரில் 30 ரன்கள் தேவைப்படும் பட்சத்தில் மூன்று சிக்ஸர்கள் அடிப்பதால் எந்த வித்தியாசமும் ஏற்பட போவதில்லை. கேதர் ஜாதவிற்கு முன்னதாகவாது தோனி இறங்கியிருக்க வேண்டும்.

image


Advertisement

பந்து வீச்சிலும் தோனியின் முடிவுகள் விசித்திரமானவையாகவே இருந்தது. ஜடேஜா மற்றும் பியூஸ் சாவ்லா வீசிய ஓவர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கு அதிக ரன்களை கொடுத்தது. அந்த ரன்கள் தான் ராஜஸ்தானை வெற்றியின் பக்கம் கொண்டு சென்றது. சாவ்லா இறுதி ஓவரில் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆனால் இந்த முயற்சி முன்னதாகவே எடுத்திருக்க வேண்டியது” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement