சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க மத்தியஸ்தமா?: பாஜக தமிழக தலைவர் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக மத்தியஸ்தம் ஏதும் பாஜக செய்யவில்லை என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


Advertisement

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக மத்தியஸ்தம் செய்யும் பணியில் பாரதிய ஜனதா கட்சி இறங்கியுள்ளதாக தகவல் வெளியானது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடந்த 20ஆம் தேதி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். சசிகலா விடுதலை தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த அவர் சென்றதாக கூறப்பட்டது. ஆனால் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது தொடர்பாக டிடிவி தினகரன் - பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

image


Advertisement

டெல்லிக்கு சென்ற டிடிவி தினகரன் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவை தேர்தலுக்கு முன்பாக கட்டமைக்க வேண்டும் என பாஜக நினைப்பதாகவும், அப்போது தான் திமுகவை தேர்தலில் எதிர்கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு பாஜக வந்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக மத்தியஸ்தம் ஏதும் பாஜக செய்யவில்லை என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

image

சென்னை எழும்பூரில் தமிழக பாஜக மாநில மகளிர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், கருப்பர் கூட்டம் என்ற சிறிய கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியது. கருப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டிய காவிக் கூட்டத்திற்கு நன்றி. தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெற வேண்டும். கன்னியாகுமாரி தொடங்கி தமிழகம் முழுவதும் பாஜக அலை வீச வேண்டும்.


Advertisement

மத்திய அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் கண் மூடிக்கிட்டு அதை எதிர்ப்பது மட்டுமே ஸ்டாலின் செய்து வருகிறார். விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக மத்தியஸ்தம் ஏதும் பாஜக செய்யவில்லை என தெரிவித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement