7வது இடத்தில் இறங்குவது ஒரு கேப்டனுக்கு அழகா? - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
217 ரன்கள் இலக்கை விரட்டும் போது 7-வது இடத்தில் இறங்குவது ஒரு கேப்டனுக்கு அழகா? என தோனியை கடுமையாக சாடியுள்ளார் கம்பீர்.
 
சார்ஜாவில் நேற்றிரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 
முன்னதாக கேப்டன் தோனி 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கியது விமர்சனத்தை உண்டுபண்ணியது. தோனி முன்னரே களமிறங்கிருக்க வேண்டும் என்றும் ரசிகர்களிடையே முனுமுனுப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில், ஏழாவது இடத்தில் தோனி இறங்கியதை கவுதம் கம்பீர், ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ டி20 டைம் அவுட் நிகழ்ச்சியில் கடுமையாக சாடிப் பேசினார்.
 
image
 
“ருதுராஜ் கெய்க்வாடை இறக்கிய பிறகு தோனி, தான் இறங்க முடிவெடுத்தது, சாம் கரணை முன்னால் களமிறங்கச் செய்தது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இது அர்த்தமுள்ளதாக தெரியவில்லை. கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்தியிருக்க வேண்டாமா? இதை கேப்டன்ஷிப் என்று அழைக்காதீர்கள்.
 
தோனி இறங்கும்போது ஆட்டம் முடிந்து விட்டது. ஃபாப் டுபிளெசிஸ் தனி வீரராக போராடிக் கொண்டிருந்தார். உடனே கடைசி ஓவரில் தோனி 3 சிக்சர்கள் அடித்தார் என்று கூறுவார்கள். அதனால் என்ன பயன்? அது அவரது சொந்த ரன்கள் அவ்வளவே.
 
image
 
தோனி செய்ததையே மற்றவர்கள், மற்ற கேப்டன்கள் செய்தால் என்ன ஆகியிருக்கும்? தோனி என்பதால் ஒருவரும் வாயைத் திறப்பதில்லை.
சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில் சாம் கரனை இறக்கி விடுவது, தோனி தன்னை விட சாம் கரணை தான் சிறந்தவர் என்று நம்புகிறார் போல் தெரிகிறது.
 
தோனி முன்னால் இறங்கி அவுட் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. அதில் தவறொன்றுமில்லை. குறைந்தபட்சம் அணியை முன்னின்று வழிநடத்தியிருக்கலாம், உத்வேகம் அளித்திருக்கலாம். கடைசி ஓவரில் ஆடிய ஆட்டத்தை 4ம் நிலை அல்லது 5ம் நிலையில் இறங்கிச் செய்திருந்தால் டூ பிளெசிஸ் உடன் சேர்ந்து இதை ஒரு சுவாரஸ்யமான ஆட்டமாக மாற்றியிருக்கலாம். ஆனால் அப்படி சவாலாக இருக்க வேண்டும் என்ற நோக்கமெல்லாம் அவருக்கு இல்லை.
 
தோனி 7ம் நிலையில் இறங்கியது தவறான கணக்கே. சரியான கேப்டன்சி இல்லை. தோனி போன்ற ஒருவரிடம் யாரும் இதை எதிர்ப்பார்க்கவில்லை” என்று கம்பீர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
 
 
loading...

Advertisement

Advertisement

Advertisement