‘மிகுந்த வலியோடு அன்றிரவு ஆடுகளத்தை விட்டு வெளியேறினேன்’ அஷ்வின் உருக்கம்!

Thank-you-for-your-love-and-support-SAYS-IPL-DELHI-CAPITALS-TEAM-PLAYER-Ravichandran-Ashwin

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பந்தை தடுக்க முயன்று காயம்பட்டதால் ஒரே ஒரு ஓவரை மட்டும் வீசிய நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார் டெல்லியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்.


Advertisement

image

முதலில் அவருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. இருப்பினும், காயத்தின் தன்மை குறித்து எந்தவித செய்தியும் வெளியாகவில்லை. 


Advertisement

காயத்தினால் அஷ்வின் இந்த சீசனில் விளையாடுவதே சந்தேகம் தான் என்ற கருத்துக்களும் பரவின. 

இந்நிலையில் அவருக்கு பெரியளவில் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. 

“நான் மிகுந்த வலியோடு தான் அன்றிரவு ஆடுகளத்தை விட்டு வெளியேறினேன். இப்போது வலி குறைந்துள்ளது. ஸ்கேன் ரிப்போர்ட்டும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் உள்ளது. உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என அஷ்வின் ட்வீட் செய்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement