அனைத்து கட்சி கூட்டம்: ஸ்டாலின் வலியுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துகட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Advertisement

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  ’மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதிமுகவில் 50 எம்.பிக்கள் இருந்தும் அக்கட்சியின் அனைத்து அணிகளும் பாஜகவை ஆதரிக்கின்றன. எனினும் மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிக்கு தடை போட முடியவில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த தீர்ப்பிற்கு அவசர அவசரமாக உச்சநீதிமன்றம் சென்று தடைபெற்ற அதிமுக அரசு மேகதாது அணை விவகாரத்தில் தடையுத்தரவை பெற முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். 
 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement