ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பார்வையாளர்களில் புதிய சாதனை படைத்திருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஐபிஎல் தொடரின் முதல் போட்டி புதிய சாதனை படைத்திருக்கிறது. பார்க் ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை இல்லாத வகையில் 20 கோடி பார்வையாளர்கள் ஐபிஎல் போட்டியை டிவி மற்றும் ஆன்லைனில் கண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. முதல் போட்டியிலேயே இந்த அளவு பார்வையாளர்களைக் கொண்ட ஒரு விளையாட்டு என்பது, மற்ற எந்த நாட்டிலும், எந்த ஒரு விளையாட்டு தொடருக்கும் இதுவரை இல்லாத ஒன்றாகும். இது ஒரு வரலாற்று தொடக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டி கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு வருடமாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் விளையாடயிருந்தார். அத்துடன் அவர் தனது ஓய்வை அறிவித்த பின்னர் விளையாட இருந்த முதல்போட்டியாக அந்த ஐபிஎல் போட்டி இருந்தது. விறுவிறுப்புடன் நடந்த அப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்தது.
Loading More post
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? - அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு: ஆன்லைன் மூலம் கையெழுத்தான ஒப்பந்தம்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?