மணல் திட்டுகளில் பரிதாபமாக சிக்கித் தவிக்கும் திமிங்கலங்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவின் தெற்குக் கடற்கரையில் உள்ள டாஸ்மானியா தீவில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் மணல் திட்டுகளில் சிக்கி தவித்துவருகின்றன.


Advertisement

மீட்புக்குழுவினர் திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்ப முயற்சித்து வருகின்றனர். 270 திமிங்கலங்களுக்கும் அதிகமாக இருப்பதால் திரும்ப கடலுக்குள் அனுப்பவது அவ்வளவு எளிதாக இல்லை என டாஸ்மானியா பூங்கா மற்றும் வனவிலங்கு மேலாளர் நிக் டேக்கா ஏஇசிக்கு கொடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த திமிங்கலங்கள் மூன்று வெவ்வேறு இடங்களில் கரை ஒதுங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

image


Advertisement

திமிங்கலங்களை கடலுக்குள் திருப்பிவிட தளவாடங்களை அமைத்து போலீஸாரும் உதவி வருகின்றனர். இதனால் படகுகளில் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

image

செப்டம்பர் 2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இதேபோல் 26 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அதில் 16 இறந்துபோயின. 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்திலும் 145 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின.


Advertisement

 

இதையும் படிக்க: 330 யானைகள் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: காரணம் தெரிய வந்தது ! 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement