நெல்லையில் திமுக பிரமுகர் மீது கொலைவெறித் தாக்குதல்!  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லையில் திமுக பிரமுகர் மீதான கொலை முயற்சி சம்பவத்தில் திமுக பகுதி செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   


Advertisement

நெல்லை மாநகரம் சந்திப்பு பகுதியில் கேபிள் டிவி நடத்தி வருபவர் மாரியப்பன். இவர் திமுகவின் நெல்லை மத்திய மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி மாரியப்பன் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால்,  பைக்கில் வந்த மாரியப்பன் தலை மீது பலமாக தாக்கியுள்ளார்.


Advertisement

நான்கு நாட்கள் சுய உணர்வற்ற நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாரியப்பன் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இந்த கொலைவெறி தாக்குதல் குறித்து உறவினர்கள் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக நெல்லை மாநகராட்சியின் திமுக முன்னாள் தச்சை மண்டல தலைவரும், திமுக பகுதி செயலாளருமான சுப்பிரமணியன் உள்பட மூவர் மீது கொலை முயற்சி, பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது சதி திட்டம் தீட்டியது ( 294 b, 324, 506 (2 ), 120 B ) என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கொரோனா தடை காலத்தில் மாரியப்பன் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல், மருத்துவ சேவை உதவி என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாரியப்பன் வசிக்கும் பகுதியில் வார்டு உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் மாரியப்பனுக்கே கிடைக்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

இந்த நிலையில்தான் மர்ம நபரால் மாரியப்பன் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். திமுகவில் மாநகராட்சியின் முன்னாள் தச்சை மண்டலத் தலைவராக இருந்த சுப்பிரமணியன் கட்சிப் பணிகளில் தனக்கு போட்டியாக மாரியப்பன் வருவதை விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே இந்த கொலை வெறி தாக்குதல் மாரியப்பன் மீது நடைபெற்றுள்ளது என்கின்றனர் அப்பகுதி வாசிகள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement