மாதவன் பாராட்டிய மாரத்தான் வீரர்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Madhavan-praised-by-marathoner-

தடுமாறி பின்னுக்கு சென்றவருக்காக வெற்றி வாய்ப்பை விட்டுக்கொடுத்த வீரரை நெகிழ்ந்து பாராட்டியுள்ளார் நடிகர் மாதவன்.


Advertisement

பார்சிலோனாவில் நடந்த மராத்தானில் ஸ்பெயின் வீரர் டியோகோ மென்ட்ரிகாவுக்கு முன்னாள் சென்றுக் கொண்டிருந்த பிரிட்டிஷ் தடகள வீரர் ஜேம்ஸ் டீகல், ஒரு வளைவில் திரும்பும்போது தடுமாறியதால் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

இதைக் கண்ட மென்ட்ரிகா வெற்றிக் கோட்டை கடக்காமல் ஜேம்ஸ் டீகலுக்கு வழிவிட்டார். இதனால், மாரத்தானில் 3-வது இடத்தை பிடித்து டீகல் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


Advertisement

image

இறுதிக் கோட்டிற்கு அருகில் சென்ற போதிலும், தனது போட்டியாளர் வெற்றி பெற வழிவிட்ட வீரருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-டிவிட்  செய்துள்ள நடிகர் மாதவன், ‘இதுமாதிரி எல்லோரும் நல்ல உள்ளம் கொண்ட கொண்டதொரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement