பைக்கை திருட முயன்ற வாலிபர்... விசாரணையின் போது காவல்நிலையத்தில் இருந்து தப்பியோட முயற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இருசக்கர வாகனத்தை திருட முயன்ற வாலிபரை பிடிக்கச் சென்ற காவல் ஆய்வாளர் வாகனத்தை தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபர் கைது. 


Advertisement

image

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைக்க முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள துணை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மணிகண்டன் என்ற வாலிபரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


Advertisement

 image

விசாரணையின்போது காவல்நிலையத்தில் இருந்த கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி கடிகாரம் போன்ற பொருட்களை சேதப்படுத்தி விட்டு காவல்நிலையத்திலிருந்து தப்பிஓடிய மணிகண்டன் காவல்ஆய்வாளரின் வாகனத்தின் கண்ணாடியை கையில் வைத்திருந்த கற்களால் சேதப்படுத்தி விட்டு தப்ப முயன்ற போது விரட்டிச்சென்று பிடித்துள்ளனர்.

image


Advertisement

பின்னர் மீண்டும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில். வாகன திருட்டில் ஈடுபட முயன்ற வாலிபர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் மணிகண்டனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement