கிருஷ்ணகிரி அருகே புகைபிடிக்க தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதாக வழக்கு பதிவு செய்து சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே பன்னந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவர் தனது வீட்டின் வெளியில் அமர்ந்து பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த 17 வயது சிறுவன் புகை பிடிக்க தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு பச்சையம்மாள் தீப்பெட்டி இல்லை என்று கூறவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்து சென்ற சிறுவன் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து பச்சையம்மாளை நோக்கி சுட்டதில் கழுத்து, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பச்சையம்மாளிடம் கேட்டபோது சிறுவன் தனது உறவினர் என்றும் இருவருக்கும் இடையே எந்தவித தகராறும் இல்லை என தெரிவித்தார். மேலும் வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென பால்ஸ் குண்டுகள் வந்து அடித்ததால் தான் மயக்கம் அடைந்ததாக தெரிவித்தார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மலைமீது தலைமறைவாக உள்ள சிறுவனை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்