குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: கனமழைக்கு வாய்ப்பு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இதன்  காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Advertisement

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிருடன் மழையும் பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சி, எமரால்டு, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது.

image

அதிகபட்சமாக, அவலாஞ்சியில் 182 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதே போல, தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை , குற்றாலம், புளியரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement